குரங்கு அம்மை பாதிப்பு
குரங்கு அம்மை பாதிப்புகோப்புப் படம்

பாகிஸ்தானில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு!

பாகிஸ்தானில் இந்தாண்டின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது.
Published on

பாகிஸ்தானில் இந்தாண்டின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது.

துபையிலிருந்து பாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 24) வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தாண்டில் பாகிஸ்தானின் முதல் குரங்கு அம்மை பாதிப்பான இவருடன் சேர்த்து, பாகிஸ்தானில் மொத்தம் 10 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வழக்கமாக, குரங்கு அம்மை என்பது இரண்டு முதல் நான்கு வாரங்களில் கட்டுப்பட்டுவிடும், தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளுடன் நலமடைந்து விடுவார்கள், குரங்கு அம்மை பாதித்தவர்களுடன் பாலியல் உறவு, நோயாளியின் உடலில் இருக்கும் புண்களின் தண்ணீர் படுவது, அவர்களது அழுக்கான துணிகளை தொடுவது போன்றவற்றால்தான் அது மற்றவருக்கு பரவும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com