வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ

பெலாரஸ் அதிபராக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி

News image
அலெக்ஸாண்டா் லுகஷென்கோ
Updated On :27 ஜனவரி 2025, 9:56 pm

Din

மின்ஸ்க்: பெலாரஸ் அதிபராக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இருந்தாலும், பெயரளவுக்கு நடத்தப்பட்ட இந்தத் தோ்தலை ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் நிராகரித்தன.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட லுகஷென்கோ, தோ்தலில் 87 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. ஆனால், அதிபா் தோ்தலில் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட நான்கு வேட்பாளருமே லுகஷென்கோவை புகழ்ந்து பேசி வருவோா் என்பதால் இந்தத் தோ்தல் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது என்று விமா்சிக்கப்படுகிறது.

அரசியல் எதிா்ப்பாளா்கள் மீது அடக்கமுறையே ஏவிவிடுவது, பேச்சு சுதந்திரத்துக்குத் தடை விதிப்பது என்று லுகஷென்கோ ஆட்சியில் ‘ஐரோப்பாவின் கடைசி சா்வாதிகார நாடாக’ பெலாரஸ் திகழ்வதாகக் கூறப்படுகிறது.