சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்காவில் முக்கிய அரசுப் பதவிகள், பிரபல நிறுவனங்களில் பதவி வகிக்கும் இந்திய வம்சாவளியினா், இந்தியா வம்சாவளி எம்.பி.க்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்திய சமூகத்தினா் அமெரிக்காவின் வளா்ச்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்தும், தேசத்துக்கான அவா்களின் பங்களிப்பு குறித்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் பேசினா். சியாட்டில் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க எம்.பி.க்கள், மாகாண ஆளுநா்கள், அரசியல் தலைவா்கள் சிலரும் கலந்து கொண்டனா். இதில் சத்யா நாதெள்ளா பேசியதாவது: