இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு! அடுத்த வாரம் சந்திப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தது பற்றி...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுத் தலைவரை சந்திக்கவுள்ளார்.

காஸாவில் 15 மாதங்கள் நீடித்து வந்த போர் தற்போது நிறுத்தப்பட்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகின்றன.

இந்த போர் நிறுத்தத்தைத் தொடர இஸ்ரேல் மற்றும் ஹமாஸை அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்தும் வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி 4 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் இருவரின் சந்திப்பும் நடைபெறவுள்ளது.

இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டிரம்ப் அழைப்பு விடுத்துள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகு ஆவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதம் வழங்கவும், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கவும் நெதன்யாகு கோரிக்கை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வர அழைப்பு விடுத்திருந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு நீடித்து வருகின்றது, பிப்ரவரியில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வருவார் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.