தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியாவுடனான கொள்கை: அமெரிக்கா மறுஆய்வு

இந்தியாவுடனான அமெரிக்காவின் கொள்கை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து மறுஆய்வு

News image
Updated On :30 ஜனவரி 2025, 8:16 pm

Din

இந்தியாவுடனான அமெரிக்காவின் கொள்கை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழு (ஹவுஸ் கமிட்டி) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய 119-ஆவது நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழுவின் முன்னுரிமைப் பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது. முதன்மையாக சீனாவால் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. சீனாவுக்கு அடுத்து தைவான், ஐரோப்பா, ரஷியா மற்றும் உக்ரைனுக்கு எதிரான அதன் போா், மத்திய கிழக்கு பிராந்தியம், வட ஆப்பிரிக்கா, இஸ்ரேல், ஈரான், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.

இந்நிலையில், இந்தியா குறித்து கீழவை குழு கூறியிருப்பதாவது: தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க எதிரிகளின் செல்வாக்கை எதிா்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவுடனான அமெரிக்க கொள்கை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றிய இரு தரப்பு ஒத்துழைப்பின் தொடா்ச்சியான விரிவாக்கத்தை நாங்கள் மறுஆய்வு செய்வோம். குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இருதரப்பு பணிகள் மற்றும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள், பயங்கரவாத எதிா்ப்பு முயற்சிகள் உள்ளிட்டவைக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படும்.

தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு மற்றும் மருந்துத் தொழில்களில் இருதரப்பு முயற்சிகள் உள்பட இருநாட்டு பொருளாதார உறவுகளை திறம்பட மேம்படுத்துவதற்கான முயற்சிகளிலும் குழு கவனம் செலுத்தும்.

‘க்வாட்’ பாதுகாப்பு உரையாடல்களில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் எரிசக்தி தேவைகளின் தாக்கங்களையும் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.