பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அமெரிக்க விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்பு!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டது பற்றி...

News image

மீட்புப் பணியில் வீரர்கள்.

AP

Updated On :31 ஜனவரி 2025, 3:17 am

DIN

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த ராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ் உயிரிழந்தனா்.

விமானமும் ஹெலிகாப்டரும் வெடித்து பல பாகங்களாக பொடோமேக் ஆற்றில் விழுந்ததை தொடர்ந்து புதன்கிழமை இரவு முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவசரகால மீட்புப் படை, போலீஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து நடந்து 24 மணிநேரம் கடந்துள்ள நிலையில், ஆற்றின் தட்பவெப்பம் 2 டிகிரி செல்சியஸாக இருப்பதால் இதுவரை 28 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. யாரும் உயிருடன் மீட்கப்படாததால் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர். விபத்தின்போது விமானிகள் பேசிக்கொண்ட பதிவுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

கருப்பு பெட்டி மூலம் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஒரு மாதத்துக்குள் முதல்கட்ட அறிக்கையை வெளியிடுவோம் என்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.