டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் தடை
டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?
Published on
Updated on
1 min read

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் யாரும் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை போன் மற்றும் கணினியில் பதிவிறக்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவெ, அமெரிக்கா முழுவதும் சீனாவின் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் அலுவலகத்தில் டீப்சீக் செயலி தடை செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் தகவல்கள் காரணமாக டிக்டாக் செயலி ஜனவரி 19 ஆம் தேதி முதல் அமெரிக்கா முழுவதும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாம் ஆல்ட்மேன் என்ற அமெரிக்கரின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளத்தை கடந்த ஒருவார காலமாக பின்னுக்குத் தள்ளியது, சீன செயற்கை நுண்ணறிவு தளம் டீப்சீக். அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவார காலத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலியாக டீப்சீக் உருவெடுத்துள்ளது.

சாட் ஜிபிடியில் புதிய பதிப்புகளை பயன்டுத்த, அதற்கென தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டீப்சீக் தளத்தில் அனைத்துமே இலவசமாக இருப்பது பயனர்களிடையே பெரிதும் விரும்பக்கூடியதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com