
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நாடுகளுக்கு திங்கள்கிழமை(ஜூலை 7) கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருள்களுக்கு உச்சபட்சமாக 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமருக்கு டிரம்ப் எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ஆகஸ்ட் 1, 2025 முதல் நாங்கள்(அமெரிக்கா), ஜப்பான் மீது வெறும் 25 சதவீதம் மட்டுமே வரி வசூலிப்போம். அமெரிக்காவுக்கு வரும் அனைத்து ஜப்பானிய பொருள்கள் மீதும் இது பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடுகள் - வரி விகிதம்
மியான்மர் - 40%
லாவோஸ் - 40%
தாய்லாந்து - 36%
கம்போடியா - 36%
செர்பியா - 35%
வங்கதேசம் - 35%
இந்தோனேசியா - 32%
போஸ்னியா & ஹெர்ஸேகோவ்னிய - 30%
தென்னாப்பிரிக்கா - 30%
தென் கொரியா - 25%
கஸகஸ்தான் - 25%
மலேசியா - 25%
துனீசியா - 25%
ஜப்பான் - 25%
டிரம்ப் இந்தியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகளுக்கு கடிதம் இன்னும் எழுதவில்லை. பரஸ்பர வரி விதிப்பு விவகாரத்தில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒப்பந்தம் இறுதியாவது அமெரிக்காவின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது.
அதன்பின்னரே, ஆகஸ்ட் 1முதல் அமலாகவுள்ள அமெரிக்காவின் விதிப்பு நடவடிக்கையின்கீழ், இந்திய பொருள்கள் மீதான வரி எவ்வளவு? என்பது உறுதியாக தெரிய வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.