
லண்டன் சௌத் எண்ட் விமான நிலையத்தில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் எசெக்ஸில் உள்ள லண்டன் சௌத்எண்ட் விமான நிலையத்தில் ஒரு சிறிய விமானம் (அந்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு) மேலெழும்பிய சில வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.
அந்த சிறிய ரக விமானம் பி200 சூப்பர் கிங் ஏர் ஆக இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், அந்த விமானம் என்ன? விபத்தில் யாருக்கேனும் காயங்களோ அல்லது உயிரிப்புகள் குறித்தோ அதிகாரிகள் இன்னும் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.
இதுகுறித்து சௌத்எண்ட் காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சௌத்எண்ட் விமான நிலையத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் நாங்கள் இருக்கிறோம். 12 மீட்டர் நீளம் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதாக மாலை 4 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது.
தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பணி தொடரும் வரை, முடிந்தவரை இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.