
தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஷிராஸில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஃபார்ஸ் மாகாணத்தின் அவசரகால அமைப்பின் தலைவர் மசூத் அபேத் கூறுகையில், காலை 11:05 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்தனர்.
விபத்திற்கான காரணம் விசாரணையில் உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்பு நடவடிக்கை முடிந்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு கூடுதல் தகவல்களும் இறுதி புள்ளிவிவரங்களும் அறிவிக்கப்படும் என்றார். இச்சம்பவம் ஈரானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் சாலை மற்றும் தெரு விபத்துக்களில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 17,000 பேர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.