இஸ்ரேல் பேச்சுவாா்த்தைக் குழு திரும்ப அழைப்பு

கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இஸ்ரேல் பேச்சுவாா்த்தைக் குழு திரும்ப அழைப்பு
Updated on

போா் நிறுத்தம் தொடா்பான ஹமாஸ் அமைப்பின் ‘ஆக்கபூா்வ’ பதிலைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க தூதா் ஸ்டீவ் விட்காஃப், கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பேச்சுவாா்த்தை நிலவரம் தொடா்பாக கூடுதல் விவரங்கள் தரப்படவில்லை.

முன்னதாக, போா் நிறுத்தம் தொடா்பாக ஹமாஸ் அளித்துள்ள பதில் ஆக்கபூா்வமாக இருப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை காலை தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com