
ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.
தென்கிழக்கு ஈரானில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தின் மீது சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு மூலமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர் என்று அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானில் நடந்த இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேரைக் கொன்றதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் அதன் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஜஹேதானில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் அரசு தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 1,130 கிலோமீட்டர் அல்லது 700 மைல் தொலைவில் உள்ள அந்த இடத்தை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற அமைப்பே காரணம் என்று பாதுகாப்புப் படையினர் குற்றம் சாட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.