
நியூயார்க் மாகாணத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் 44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை அணிந்துவந்து சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பிஎம்டபிள்யூ காரில் வந்த ஒருவர் தனது கையில் எம்14 துப்பாக்கியுடன் வணிக வளாகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் காவல் துறை அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 36 வயதான காவல் துறை அதிகாரி வங்கதேசத்தைச் சேர்ந்த திருதுல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்து மூன்றரை ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நெவாடாவைச் சேர்ந்த ஷேன் டமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : ‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.