
சீனாவில் பெய்த கனமழையால், நேபாள நாட்டின் போடேகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ரசுவா மாவட்டத்தில் 16 கி.மீ. சாலை முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரசுவா மாவட்டத்தின், போடேகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சயாப்ருபேசி - ரசுவாகாதி சாலையில் வெள்ள சூழ்ந்து16 கி.மீ. தூரம் முடங்கியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, சயாப்ரூபேசி முதல் ரசுவாகாதி வரை செல்லக்கூடிய சாலையில், வெள்ளம் ஏற்பட்டு சுமார் 1 கி.மீ. நீளமுடைய சாலைப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த சாலையில், கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ஒருவழிப் பாதை மட்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அங்கு மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்தச் சாலை மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில், கோசைகுண்டா கிராமத்தின் 2 மற்றும் 3 ஆம் வார்டு பகுதிகளில் அமைந்திருந்த சாலைப் பகுதிகள் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்து அடித்துச் செல்லபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொடேகோஷி, திரிசூலி, லாங்டாங் மற்றும் சிலிமே ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாக ரசுவா மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த, ஜூலை 8 ஆம் தேதி, நேபாள - சீனா எல்லையில் அமைந்திருந்த எல்லைப் பாலமானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? -மத்திய அரசு விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.