
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 51 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெண்களும் சிறுவா்களும் அடங்குவா் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினா்.
இருந்தாலும் இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 600 நாள்களுக்கும் மேல் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது.
இதில் இதுவரை 54,470 போ் (திங்கள்கிழமை நிலவரம்) உயிரிழந்துள்ளனா்; 1,24,693 போ் காயமடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.