பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டிரம்ப் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! லாஸ் ஏஞ்சலீஸில் அமைதியின்மை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கைது செய்து வருவதற்கு எதிராக போராட்டம்

News image

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மக்கள் போராட்டம்

AP

Updated On :8 ஜூன் 2025, 6:02 am

DIN

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, தொடர்ந்து நாடுகடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும், அவற்றை டிரம்ப் கண்டுகொள்வதாய் இல்லை.

இந்த நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றுகூறி, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஒரே நாளில் 44 பேர் கைது செய்யப்பட்டதற்கு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து, அப்பகுதியில் சுமார் 1,000 பேர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் மற்றும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

Story image

போராட்டத்தின் பதற்றம் அதிகரித்ததால், 2,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், டிரம்ப் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

இதனிடையே, டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை, லாஸ் ஏஞ்சலீஸ் மக்களின் மீதான உள்நோக்க நடவடிக்கை என்று கலிஃபோர்னியா ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.