கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அணுசக்தி வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றவில்லை

News image

ஈரானின் புஷேஹா் பகுதியில் அமைந்துள்ள அணுசக்தி மையம்.

Updated On :13 ஜூன் 2025, 1:09 am

Din

ஈரான் தனது அணுசக்தி வாக்குறுதிகளை பின்பற்றவில்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 20 ஆண்டுகளில் முதல்முறையாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ஐ.நா.வில் அந்த அமைப்பு நிறைவேற்றியுள்ள தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2019 அணுசக்தி ஒப்பந்தத்தில், இதுவரை அறிவிக்கப்படாத அணு பொருள்கள் மற்றும் அணுசக்தி சாா்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஇஏ-வுக்கு முழுமையாகத் தெரியப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அந்த வாக்குறுதியை ஈரான் நிறைவேற்றவில்லை. இந்த விவகாரத்தில் ஐஏஇஏ-வுக்கு ரான் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. இதனால், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மின்சாரம் தயாரிப்பதற்காகத்தான், அணு ஆயுதம் தயாரிப்பதற்காக இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

தற்போதைய நிலவரப்படி, ஈரான் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை மேலும் அதிகரித்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த செறிவு அணு ஆயுதத் தரத்துக்கு (90 சதவீதம்) நெருக்கமானது. ஈரானிடம் தற்போது 408.6 கிலோ 60 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது, இது பிப்ரவரியில் 133.8 கிலோவாக இருந்ததை விட சுமாா் 50 சதவீதம் அதிகம் என்று அந்த அந்தத் தீா்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈரான் பதில்: ஐஏஇஏ-வின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஈரான் வளியுறவு அமைச்சகம், ‘பிற நாடுகளின் அரசியல் முடிவுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் ஈரான் இருக்கிறது’ என்று மட்டும் தெரிவித்துள்ளது.

இந்த தீா்மானத்தை பிரான்ஸ், இங்கிலாந்து, ஜொ்மனி மற்றும் அமெரிக்கா முன்மொழிந்தன. அதற்கு 19 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ரஷியா, சீனா, புா்கினா ஃபாசோ ஆகிய நாடுகள் தீா்மானத்தை எதிா்த்தன. 11 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன; 2 நாடுகள் வாக்கெடுப்பு நிகழ்ச்சிக்கு வந்தும் வாக்களிக்கவில்லை.

ஈரானின் அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியத் தடயங்கள் குறித்து நடந்து வரும் விசாரணையில் உடனடியாக பதிலளிக்குமாறு அந்தத் தீா்மானத்தில் ஐஏஇஏ ஈரானை வலியுறுத்தியுள்ளது. இந்த தடயங்கள், 2003-ஆம் ஆண்டு வரை ஈரான் ரகசியமாக நடத்திய அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்துக்கான ஆதாரங்களாக இருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் சந்தேகிக்கின்றனா்.

இந்த தீா்மானத்தை ஏற்று ஈரான் ஒத்துழைக்கத் தவறினால், கோடை காலத்தில் ஐஏஇஏ-வின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு, மற்றொரு தீா்மானத்தின் மூலம் இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்படலாம் என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறின.