அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்க நினைத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் ராணுவம் மற்றும் கடற்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், ஈரான் மீது சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் ஏதேனும் நடத்தினால், இதுவரை கண்டிராத அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு வலிமையும், ஈரான் மீது செலுத்தப்படும்.
இருப்பினும், இஸ்ரேல் - ஈரான் போரை மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயான மோதலில், ஈரானில் 78 பேர் பலியானதுடன், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இஸ்ரேலில் 3 பேர் பலியானதுடன், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க தரைப்படை களமிறங்கினால் கடும் பதிலடி: ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


