
காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 38 பேர் பலியாகினர் என்று காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளது.
காஸா முனையில் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதொரு பகுதியில் அமைந்துள்ள உணவு விநியோக மையத்தில் உணவு பெற ஏராளமான பாலஸ்தீனர்கள் இன்று(ஜூன் 16) அதிகாலையில் திரண்டனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிகாலை 4 மணியளவில் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்களில் 38 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.