US embassy in Tel Aviv suffers damage
இஸ்ரேல்

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
Published on

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தூதரகம் லேசான சேதமடைந்துள்ளதாகவும் இதனால் இன்று தூதரகம் தற்கொலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நாடு கருதுகிறது. இதையடுத்து ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை தலைவர் கொலை!

இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல் தொடா்ந்து 3-ஆவது நாளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட 406 பேர் பலியானார்கள்.

அதேபோல் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com