ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம்!

ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

வட கொரிய அதிபருடன் ரஷிய அதிபர் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2025, 2:04 pm

ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்கெய் ஷோய்கு, வட கொரியாவின் பயோங்யாங் பகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.

வட கொரியா அனுப்பும் ராணுவ பொறியாளர்களில் 5 ஆயிரம் பேர் ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் ஆயிரம் பேர் சாலை மற்றும் பாலங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே மாஸ்கோவில் இருந்து ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்கெய் ஷோய்கு, கடந்த இரு வாரங்களில் இரண்டாவது முறையாக அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜூன் மாத தொடக்கத்தில் வட கொரியாவுக்குச் சென்று கிம் ஜாங் உன்னை சந்தித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவரை செர்கெய் சந்தித்துள்ளார்.

இந்த இரு சந்திப்புகளின்போதும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.

ரஷியா - வட கொரியா இடையே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, தற்போது ராணுவ பொறியாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.