ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

News image
Updated On :17 ஜூன் 2025, 9:30 pm

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்தப் படுகொலைகளுக்கான சூழல் குறித்து உடனடி தகவல் இல்லை. மேலும், அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோகத்துக்கும்&தச் சம்பவத்துக்கும் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.பட்டினியால் வாடும் பாலஸ்தீனா்கள் உணவுப் பொருள்களுடன் வரவிருந்த லாரிகளுக்காக காத்திருந்தபோது இஸ்ரேல் படையினா் அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறினா்.

மூன்று வாரங்களுக்கு முன்னா் காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோா் மீது இஸ்ரேல் படையினா் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதில் இதுவரை நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.தங்கள் வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒப்புக்கொள்ளும் இஸ்ரேல் ராணுவம், நிவாரணப் பொருள்களை வாங்க வருவதற்கான நெறிமுறைகளைப் பின்பற்றாமல் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவா்களை நோக்கிதான் வீரா்கள் சுடுவதாகக் கூறுகிறது.

தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விநியோக வழிமுறைகள், நிவாரணப் பொருள்கள் ஹமாஸ் கைகளுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அண்மையில் கூறியது.இந்தச் சூழலில், உணவுப் பொருளுக்காக காத்திருந்தவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 45 போ் உயிரிழந்ததாக தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.