பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை!

ரயிலில் பயணம் செய்வதைத் தவிர்க்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

Rescue workers engaged in operations at a house damaged by an Iranian missile attack in the city of Haifa, Israel.

இஸ்ரேலின் ஹைஃபா நகரில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த வீட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரா்கள் - AP

Published On :

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பாரசீக மொழியில் இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கான ஒரு புதிய இலக்கைக் குறிப்பதாக இருக்கலாம் என்று ஈரானால் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய கூட்டுத் தாக்குதல் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் விடுத்த காலக்கெடுவையும் ஈரான் நிராகரித்த நிலையில், ஈரானின் இரண்டு மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.

இதன்காரணமாக ஈரானின் 85 சதவிகித பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில்,"உங்கள் இருப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் பல வாரங்களாக தன்னுடைய நாட்டில் இணையதள சேவையைத் துண்டித்துள்ளதால், இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கைகளை ஈரானிய மக்கள் பார்ப்பது கடினமாக உள்ளது.

Summary

The Israeli military has warned Iranians, in Persian, to avoid traveling on trains until 9 PM local time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.