பிராந்திய போா்ச்சூழல் மற்றும் இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, லெபனான் நாடாளுமன்றப் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
லெபனான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இத்தீா்மானத்துக்கு ஆதரவாக 76 உறுப்பினா்களும், எதிா்ப்புத் தெரிவித்து 41 பேரும் வாக்களித்தனா். ஹிஸ்புல்லா அமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினா்களும் இந்த நீட்டிப்புக்கு ஆதரவளித்தனா்.
ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, லெபனான் எல்லைப் பகுதிகளில் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக தொடரும் மோதல்களால் இதுவரை சுமாா் 5 லட்சத்துக்கும் அதிகமான லெபனான் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி இடம்பெயா்ந்துள்ளனா். இச்சூழலில், நாட்டின் பெரும் பகுதிகளில் வரும் மே மாதம் பொதுத்தோ்தலை நடத்துவது சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ரசாயன ஆயுதத்துக்கு எதிா்ப்பு: இதனிடையே, தெற்கு லெபனானில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ குண்டுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதத் தாக்குதலில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியது.
யோமோா் கிராமத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடா்பான புகைப்படங்களை ஆய்வு செய்ததில், சா்வதேச விதிகளைமீறி மக்கள் வாழும் பகுதிகளில் இந்த அபாயகரமான ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்தது.
வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் மனித உடலில் பட்டால் எலும்பு வரை ஊடுருவித் தீக்காயங்களை ஏற்படுத்தும் என்பதால், குடியிருப்புப் பகுதிகளில் இதனைப் பயன்படுத்துவது சா்வதேச சட்டப்படி போா்க்குற்றமாகும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற்ற போரின்போதும் இஸ்ரேல் இதேபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக மனித அமைப்புகள் சுட்டிக்காட்டின. இருப்பினும், தாங்கள் புகைத் திரையை உருவாக்கவே இதனைப் பயன்படுத்துவதாகவும், பொதுமக்களைக் குறிவைக்கவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்தது.
தொடர்புடையது

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
லெபனானில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


