இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் பற்றி ரஷியா கருத்து...
israel-iran ceasefire
அமெரிக்கா தாக்குதலுக்கு எதிராக ஈரான் மக்கள் போராட்டம் நடத்தியபோது...AP
Updated on
1 min read

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது தெரியவில்லை என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 12 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூன் 24) அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.

போர் நிறுத்தத்திற்குப் பிறகும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது எனவும்ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

மேலும், "அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டிடமும் கத்தார், ஈரான் நாட்டிடமும் அமைதி பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதனால் இப்போது முடிவுக்கு வருவது சாத்தியமானது அல்ல. எந்த இறுதி முடிவுகளையும் இப்போது கூற முடியாது" என்று கூறியுள்ளார்.

மேலும் ஈரானுக்கு ரஷியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.

முன்னதாக நேற்று(திங்கள்கிழமை) ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com