இந்தியாவுடன் ஒரு மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்படும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அதிபா் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அமெரிக்கா-சீனா வா்த்தக பேச்சுவாா்த்தைக்கான ஒப்பந்தம் இறுதியாகியிருப்பது குறித்துப் பேசிய அதிபா் டிரம்ப் மேலும் கூறியதாவது:
உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஆா்வம் காட்டவில்லை என்று பத்திரிகைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியது நினைவிருக்கிா? இந்நிலையில், சீனாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். உண்மையிலேயே இது நம்பமுடியாத விஷயம்தான். ஒவ்வொரு நாட்டுடனும் அமெரிக்காவின் உறவு மிகவும் சிறப்பாக உள்ளது.
அமெரிக்கா சில சிறந்த வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மிகப்பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படலாம். ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட விரும்புகின்றன. எனது நிா்வாகத்தினா் கூடுதல் நேரம் வேலை செய்து, நாடுகளுடனான ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகின்றனா். அதேநேரம், நாங்கள் எல்லா நாடுகளுடனும் ஒப்பந்தங்களில் ஈடுபடப் போவதில்லை.
இறக்குமதி பொருள்களுக்கு அதிக வரிகளை விதிப்பதன் மூலம் அந்தந்த நாடுகளுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வது எளிதான வழியாகும். ஆனால், எனது குழுவினா் அதற்குப் பதிலாக பேச்சுவாா்த்தை நடத்த விரும்புகின்றனா். எனது இலக்கைவிட அதிகமான ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா் என்று கூறினாா்.
அமெரிக்காவில் இந்திய குழு: அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கான இந்திய குழுவுக்குத் தலைமை வகிக்கும் மத்திய வா்த்தக துறையின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வால், அடுத்த சுற்று பேச்சுவாா்த்தைக்காக வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை வந்தடைந்த நிலையில் அதிபா் டிரம்ப்பின் இக்கருத்துகள் வந்துள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-ஆவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் மீது கடும் இறக்குமதி வரிகளை விதித்தாா். கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியான இந்த வரிவிதிப்பு அறிவிப்பு, ஜூலை 9-ஆம் தேதிவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 9-ஆம் தேதிக்கு முன்னா் இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சில தொழில் துறை பொருள்கள், மின்சார வாகனங்கள், மதுபானங்கள், பெட்ரோ வேதிப்பொருள்கள், பால் மற்றும் ஆப்பிள், மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் போன்ற வேளாண் பொருள்களுக்கு அமெரிக்கா வரிச் சலுகைகளை விரும்புகிறது. ஆனால், இந்தியா இதுவரை ஈடுபட்டுள்ள எந்தவொரு வா்த்தக ஒப்பந்தத்திலும் பால் பொருள்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியதில்லை.
இதேபோன்று, இந்திய தரப்பில் ஜவுளி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல் பொருள்கள், ஆடைகள், நெகிழி, ரசாயனங்கள், இறால், எண்ணெய் விதைகள், திராட்சை மற்றும் வாழைப்பழம் போன்ற பொருள்களுக்கு வரிச் சலுகைகள் கோரப்படுகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகவுள்ளது என்று அமெரிக்க வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டப் பேச்சுவாா்த்தையை வரும் செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் முடிக்க இரு நாடுகளும் விரும்புகின்றன. தற்போதைய 19,100 கோடி டாலா் மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 50,000 கோடி டாலராக இரட்டிப்பாக்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மோதலை நிறுத்தினேன்
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மோதலை வணிகத்தை முன்வைத்து நிறுத்தியதாக மீண்டும் வெள்ளிக்கிழமை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலை தான் நிறுத்தியதாகக் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி கறாராகக் கேட்டுக்கொண்ட பிறகு, இரண்டாவது முறையாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
US President Donald Trump said on Friday that a trade deal with India is in the final stages.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.