பாகிஸ்தான் திடீர் வெள்ளம்: 3 நகரங்களுக்கு எச்சரிக்கை! அதிகரிக்கும் உயிர் பலிகள்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி...
பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்...
பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்...
Updated on
1 min read

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தற்போது 11 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள ஸ்வாட் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 56 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதில், 3 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம், இந்த வெள்ளத்தை “மிகவும் அதிகம்” என வகைப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பெஷாவர், சார்ஸத்தா மற்றும் நவ்ஷேரா ஆகிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்வாட் ஆற்றின் கரையில் அமைந்துள்ள, பிஸாகாட் பகுதிக்கு, நேற்று (ஜூன் 27) காலை இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, ஆற்றின் கரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டபோது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில், 17 பேர் பலியானது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளை உண்டாக்கி வருகின்றது.

SUMMARY

Due to Pakistan flash floods Warning for 3 cities and rising death toll!

இதையும் படிக்க: இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்! ஈரான் அல்ல; யேமன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com