மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போப் உடல்நிலையில் முன்னேற்றம்.. இன்று காலை காபி குடித்தார்!

போப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை காபி குடித்தார்!

News image

போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)

Updated On :1 மார்ச் 2025, 12:53 pm

DIN

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவர் காபி குடித்து, ஓய்வெடுத்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தொடர்ந்து குணமடைந்து வந்த நிலையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது.

இந்த நிலையில், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று காலை உணவாக அவர் காபி குடித்ததாகவும், பிறகு செய்தித்தாள் படித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாள்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அவரது நோய் பாதிப்பு குணமடையவில்லை, எனவே, அவர் அபாயநிலையை தாண்டவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 14-ஆம் தேதி முதல் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் சீராக சுவாசித்து வருகிறார். அவருக்கு ஆஸ்துமா தொடா்பான புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.