ஸெலென்ஸ்கியின் தோல்வி: டிரம்ப் சந்திப்பை விமர்சித்த ரஷியா!

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை விமர்சித்த ரஷியா...
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடனான விவாதத்தில் டொனால்ட் டிரம்ப்
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடனான விவாதத்தில் டொனால்ட் டிரம்ப்AP
Published on
Updated on
1 min read

ஸெலென்ஸ்கியின் அமெரிக்க பயணம் முழுமையான அரசியல் தோல்வி என ரஷியா விமர்சித்துள்ளது.

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாா் என்று அறிவித்தாா். ஆனால், உக்ரைனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா்.

இந்த சூழ்நிலையில் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 28) சென்ற ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன் என்று ஸெலென்ஸ்கி வலியுறுத்தவே, டிரம்ப் மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கு காரசார விவாதம் நடைபெறவே ஸெலென்ஸ்கி அங்கிருந்து கிளம்பினார்.

இந்த விவாதத்தில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் கடுமையாகப் பேசியதைத் தொடர்ந்து அவரது அமெரிக்க பயணம் முழுமையானக தோல்வியடைந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

"நியோ-நாஜி ஆட்சியின் தலைவரான ஜெலென்ஸ்கி அன்று அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம், உக்ரைன் ஆட்சியின் முழுமையான அரசியல் தோல்வியாகும்" என்று ரஷிய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மரியா ஷகரோவா தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் மீதான ரஷியாவின் இலக்குகள் மாறாமல் இருப்பதாகவும் இந்த மோதலை நீட்டிக்க ஸெலென்ஸ்கி வெறியுடன் இருப்பதாகவும் ஷகரோவா குற்றம் சாட்டினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சென்ற ஸெலென்ஸ்கி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டார். அதில், ‘உக்ரைனுக்கு நியாயமான, நீடித்த அமைதி தேவை. நாங்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com