ரஷியாவுக்குச் செல்லுங்கள்! அமெரிக்காவில் ஜே.டி. வான்ஸுக்கு எதிர்ப்பு!

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு கடும் எதிர்ப்புகள்.
ஜே.டி. வான்ஸ், அவரின் மனைவி உஷா வான்ஸ்
ஜே.டி. வான்ஸ், அவரின் மனைவி உஷா வான்ஸ்
Published on
Updated on
2 min read

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஜே.டி. வான்ஸ் உடனான உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் ஆதரவாளர்களிடையே வான்ஸுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த சந்திப்பில் டிரம்ப் உடன் சேர்ந்து வான்ஸும் எல்லை மீறி நடந்துகொண்டதாகவும், அதனால் அவர்கள் அமெரிக்காவுக்குள் சுற்றுலா மேற்கொள்வதை விட ரஷியாவுக்குச் சென்று குடும்பத்துடன் பனிச்சறுக்கில் ஈடுபடலாம் எனவும் எதிர்ப்பாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஜே.டி. வான்ஸுக்கு பதாகை ஏந்தி எதிப்பு
ஜே.டி. வான்ஸுக்கு பதாகை ஏந்தி எதிப்பு படம் | எக்ஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபா் ஜே.டி. வான்ஸை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 28) சந்தித்துப் பேசினார் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி.

இதில், டிரம்ப் - வான்ஸின் காட்டமான விமா்சனத்தை எதிா்கொண்டு பேச்சுவாா்த்தையில் இருந்து ஸெலென்ஸ்கி பாதியிலேயே வெளியேறினாா்.

உக்ரைனின் வளங்களை எடுத்துக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுவதை விட ஸெலென்ஸ்கிக்கு வேறு வழியில்லை என்றும் அதனைச் செய்யாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமெரிக்காவை அவர் அவமதித்துவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இதனை உறுதிப்படுத்தினால் ஒப்பந்தம் அடுத்தக்கட்டத்துக்குச் செல்லும் என்றும் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.

டிரம்ப் - வான்ஸின் ஆதிக்கத்தனமான பேச்சால், அங்கிருந்து ஸெலென்ஸ்கி பாதியிலேயே வெளியேறினார். இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள உக்ரைன் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வார இறுதி நாள்களையொட்டி வடகிழக்கு அமெரிக்காவின் வெர்மான்ட் மாகாணத்திற்கு துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அங்கு உக்ரைன் ஆதரவு அமெரிக்கர்கள், வான்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நியூ யார்க் உள்பட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் உக்ரைன் ஆதரவாளர்கள் அந்நாட்டு கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெர்மான்ட் நகரிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் ஆதரவாளர்கள், வான்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவுக்கு பதிலாக ரஷியாவில் சென்று பனிச்சறுக்கி ஈடுபடுங்கள் என்ற பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், அதிபர் டிரம்ப் உடன் சேர்ந்து ஜே.டி. வான்ஸும் எல்லை மீறி நடந்துகொண்டதாகவும், இதற்கு எதிராக அமெரிக்க குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் வலுத்ததைத் தொடர்ந்து வெர்மான்ட் நகரின் பெயர் குறிப்பிடப்படாத இடத்துக்கு வான்ஸ் தனது குடும்பத்துடன் அவசரமாக வெளியேறினார்.

இது குறித்துப் பேசிய வெர்மான்ட் நகரின் கவர்னர் பில் ஸ்காட், துணை அதிபர் வான்ஸ் தனது குடும்பத்துடன் வெர்மான்ட் நகருக்கு சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு நகர மக்கள் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களை வரவேற்கும் நிர்வாகத்துடன் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com