
அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் பேசும்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.
இதற்கு முன் இருந்த அரசுகள் 4 ஆண்டுகள் அல்லது 8 ஆண்டுகளில் சாதித்ததைவிட, தன்னுடைய அரசு 43 நாள்களில் அதிகமாக சாதித்துள்ளது எனக் கூறி உரையைத் தொடங்கினார்.
அதிபர் டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம்.
நான் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலையை பிரகடப்படுத்தினேன். நமது நாட்டின் மீதான படையெடுப்பைத் தடுக்க அமெரிக்க ராணுவத்தையும் எல்லைப் படையையும் நான் நிறுத்தினேன்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
இதன் விளைவாக, கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடனுடன் ஆட்சிக்காலத்தில், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தனர்
எங்கள் பள்ளிகளில் இருந்து இனப் பாகுபாடை நீக்கிவிட்டோம். ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பதை அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ கொள்கையாக மாற்றும் உத்தரவில் நான் கையெழுத்திட்டேன்.
வரிவிதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும். கடந்த 6 வாரங்களில், நான் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன், 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
மெக்சிகோவுக்கும், கனடாவுக்கு பில்லியன் டாலர்களை மானியமாக கொடுக்கிறோம். இனி அது நிறுத்தப்படும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்களை வாங்கினால், வாகனக் கடன் வரி குறைப்பு. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு வரியை குறைக்க விரும்புகிறோம்.
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியிடமிருந்து முக்கியமான கடிதம் கிடைத்தது. அவரது நாடு அமைதிக்கு தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பேச்சுவார்த்தையில் மோதல்! தவிர்த்துக் கடந்த ஸெலென்ஸ்கி; விடாமல் தொடரும் வெள்ளை மாளிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.