துப்பாக்கியுடன் விமானத்துக்குள் புகுந்த சிறுவனால் பரபரப்பு!

விமானம், பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக சிறுவன் மீது வழக்குப்பதிவு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் விமானத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையினரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

ஆஸ்திரேலியாவில் அவலோன் விமான நிலையத்தில் மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு புறப்படவிருந்த 160 பயணிகள் கொண்ட ஜெட்ஸ்டார் விமானத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 17 வயது சிறுவனால் விமானப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுவனை விமான ஊழியர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், சந்தேகப்படும் நிலையில் இருந்த சிறுவனிடமிருந்து இரண்டு பைகளும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தைச் சுற்றியிருந்த பாதுகாப்பு வேலியின் அருகே ஒரு துளை வழியாக, அனுமதியின்றி விமான நிலையத்துக்குள் புகுந்த சிறுவன் மீது விமானம் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com