
உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படுவதையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு ஸ்டெம்(STEM - Science, Technology, Engineering and Mathematics) துறைகளில் அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில் சாதிக்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடூல்) கூகுள் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | 'பெண்களுக்கு அதிகாரம் கொடுங்கள்; நாடு மேம்படும்' - கமல்ஹாசன்
இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஸ்டெம் துறைகளில் தொலைநோக்கு பார்வை கொண்ட பெண்களை நாங்கள் இந்நாளில் கௌரவிக்கிறோம். விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய, பல பழமையான கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட, இயற்பியல், வேதியியல், உயிரியல் துறைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்த பெண்களின் புரட்சிகரமான பங்களிப்புகளை இந்த டூடூல் எடுத்துக்காட்டுகிறது. மேலும் இந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவானதுதான்.
உலக அளவில் இந்த 4 துறைகளில் பெண்களின் பங்களிப்பு 29% மட்டுமே. அனைத்துத் துறைகளிலும் பாலின சமத்துவம் வேண்டும். இதில் உள்ள இடைவெளி வருங்காலங்களில் நிரப்பப்பட வேண்டும். ' என்று கூறியுள்ளது.