இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மனைவி உஷாவுடன் ஜே.டி.வான்ஸ்..
மனைவி உஷாவுடன் ஜே.டி.வான்ஸ்..
Published on
Updated on
1 min read

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் அவரது மனைவி உஷா வான்ஸும் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணங்களுக்குப் பிறகு, வான்ஸின் இரண்டாவது அரசுமுறை சர்வதேச பயணம் இதுவாகும்.

முதலாவது வெளிநாட்டு பயணத்தின்போது முனிச்சில் நடைபெற்ற கூட்டத்தில் ஜேடி.வான்ஸ் சட்டவிரோத குடியேறிகள், மத சுதந்திரம் மற்றும் ஐரோப்பிய அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதையும் படிக்க: இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை: ராம்மோகன் நாயுடு

பிப்ரவரி மாத தொடக்கத்தில், பாரீஸில் நடந்த ஒரு சந்திப்பின் போது, ​​ஜே.டி.வான்ஸும் பிரதமர் நரேந்திர மோடியும் இருவரும் சந்தித்து விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் ஆகியோர் காபியை பகிர்ந்து கொண்டனர். வான்ஸ் குழந்தைகளுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கியதோடு, அவர்களது மகன் விவேக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றப் பின் பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக கடந்த பிப். 13 ஆம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார்.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், இருதரப்பு வரத்தக உறவை மேம்படுத்துவது குறித்து மட்டுமின்றி, உயா்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், ஜே.டி.வான்ஸின் வருகை முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், வரிவிதிப்பு விவகாரத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரயில் சிறைபிடிப்பு விவகாரம்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் மீட்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com