இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது.

News image

பிரான்ஸில் நடைபெற்ற போராட்டம் - AP

Updated On :23 மார்ச் 2025, 11:10 am IST

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது.

லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் சான் செபாஸ்டியன் நகரில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி பேரணியில் மக்கள் ஈடுபட்டனர்.

பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பிரான்ஸில் இசை வாத்தியங்கள் முழங்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று லண்டனிலும் ஏராளமான மக்கள் கூடி முழக்கங்களை எழுப்பிப் போராடினர். இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று தூதரகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

ஸ்வீடனிலும் சாலைகளில் குவிந்த மக்கள் காஸா மக்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடரும் போர்

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 2023 அக்டோபர் 7 முதல் போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் படைகளைக் குறிவைத்து காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும் காஸாவில் உள்ள இஸ்ரேலைச் சேர்ந்த பிணைக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் படையினர் முறையாக கடைபிடிக்கவில்லை எனக் கூறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுடன் எல்லையைப் பகிா்ந்துவரும் லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா படையினா், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினா். தற்போது ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.