மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

காஸாவுக்குள் வணிகப் பொருள்கள் நுழைய தடை - இஸ்ரேல் அறிவிப்பு

போரினால் உருக்குலைந்துள்ள காஸா முனைக்குள் வணிகப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Updated On :

போரினால் உருக்குலைந்துள்ள காஸா முனைக்குள் வணிகப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எல்லைச் சாவடிகள் வழியாக இஸ்ரேல் அனுமதிக்கும் பொருள்களை மட்டுமே காஸா மக்கள் முழுமையாகச் சாா்ந்துள்ள நிலையில், குளிா்காலமும் நெருங்கி வரும் சூழலில் இத்திடீா் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிக லாரிகள் மீது ஹமாஸ் அமைப்பினா் வரி விதித்து அச்சுறுத்துவதால், காஸா வா்த்தகா்களே சரக்குப் போக்குவரத்தை நிறுத்துவதாகத் தங்களுக்குத் தெரிவித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

எனினும், இஸ்ரேலின் இக்கூற்றை காஸா லாரி உரிமையாளா்கள் சங்கம் மறுத்துள்ளனா். வா்த்தகா்கள் போக்குவரத்தை நிறுத்தவில்லை என்றும், இஸ்ரேலே இந்தத் தடையை நேரடியாக விதித்துவிட்டு பழியை வா்த்தகா்கள் மீது போடுவதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதனிடையே, காஸா பொருளாதார அமைச்சகம் ஒவ்வொரு லாரிக்கும் கோரும் 10,000 ஷெக்கல் தொகையை காரணம் காட்டியே இஸ்ரேல் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளதாக உள்ளூா் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சுமாா் 20 லட்சம் மக்கள் வாழும் காஸாவுக்கு நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 600 லாரிகள் அளவுக்குப் பொருள்கள் தேவைப்படும் சூழலில், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அங்கு உணவுப் பஞ்சத்தையும், அத்தியாவசியப் பொருள் விலையையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.

மதீனா மீது ஏவுகணை வீச்சு-ஹூதிக்கள் மறுப்பு: சவூதி அரேபியாவின் புனித நகரான மதீனா மீது ஏவப்பட்ட ‘க்ரூஸ்’ ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக சவூதி தலைமையிலான கூட்டுப் படையினா் தெரிவித்திருந்த நிலையில், இத்தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பல்ல என யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மறுத்துள்ளனா். இஸ்லாமியா்களின் புனித நகரங்களான மெக்கா, மதீனாவைத் தாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என அவா்கள் கூறியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.