
நேபாளத்தில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 20ல் இருந்து 18 ஆகக் குறைக்கப் போவதாகவும், அதற்குக் கீழ் திருமணம் செய்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்க வழி வகுக்கும் சட்டத்தை இயற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச திருமண வயது 20 ஆக இருப்பதால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் கருதம் நேபாள அரு, அதனைக் குறைக்கும் வகையில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் குற்றப் பிரிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் கூட்டத் தொடரில், இது தொடர்பான மசோதா நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முடிவு எடுக்கும்முன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெறப்படும் என்று நேபாள சட்டத் துறை அமைச்சர் தெரவித்துள்ளார்.
தற்போதிருக்கும் குறைந்தபட்ச திருமண வயது போதவில்லை. அது குறைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, இரண்டாவதாக, ரோமியோ - ஜூலியட் சட்டம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் ஒரு சில வயது வித்தியாசம் இருக்கும் இருவர், சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள வழிவகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.