மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7 ஆகப் பதிவு!!

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.7 ஆகப் பதிவாகியிருக்கிறது.
நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Published on
Updated on
1 min read

மியான்மரில் இன்று பகல் 12.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.

அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டு மியான்மர் குலுங்கியதாகவும் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் நகரில் சுமார் 16 மற்றும் 18 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரவியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சகாய்ங்க் பகுதியில் இருந்த பழமையான ஆற்றுப் பாலம் சேதமடைந்திருக்கும் விடியோவும் வெளியாகியிருக்கிறது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் கட்டடங்களுக்குள் இருந்து அச்சத்துடன் வெளியேறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வானுயர்ந்த கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகும் விடியோவும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், நிலநடுக்கத்தின்போது குலுங்கி வெளியே கொட்டும் விடியோவும் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் வரை உணரப்பட்டிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு தாய்லாந்து வரை பரவியிருந்தது. தலைநகர் பாங்காக்கின் மெட்ரோ, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவிலும் உணரப்பட்டுள்ளது. யுன்னான் மாகாணத்தில் நில அதிர்வு பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com