புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து ‘ஆபரேசன் பிரம்மா’ பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மியான்மருக்கு இந்திய விமானப்படையின் இரண்டு சி - 17 ரக விமானங்களில் 60 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ராணுவ மருத்துவமனை குழுவினர் 118 பேரும் அவற்றில் புறப்பட்டுச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக சனிக்கிழமை(மார்ச் 29) பகல், 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையையும் விமானம் மூலம் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
சி130ஜே இந்திய விமானப் படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ஆக்ராவிலிருந்து 118 உறுப்பினா்களுடன் கூடிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையும் விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உதவி நடவடிக்கைகள் மூலம், இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக மியான்மருக்கு, 5 மீட்புப்படை விமானங்கள் சனிக்கிழமை(மார்ச் 29) சென்றடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


