
நேபாளத்திற்கு இந்தியாவின் தொடர் உதவி… 11 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு!
நேபாளத்திற்குக் கூடுதல் நிவாரணப் பொருள்களை அனுப்பியது பற்றி..

நிவாரணப்பொருள்களை ஏற்றிச் சென்ற விமானம். - படம் - எக்ஸ்
நேபாளத்திற்கு 11 டன் அடங்கிய நிவாரணப் பொருள்களை இந்தியா ராணுவப் போக்குவரத்து விமானம் மூலம் காத்மாண்டுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பகிர்ந்த எக்ஸ் தகவலின்படி,
அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீட்சிப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.
மருந்துகள், தடயவியல் ஆய்வு பொருள்கள், கூடாரங்கள், சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள், மற்றும் பிற பொருள்கள் என மேலும் 11 டன் நிவாரணப் பொருள்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளோம்.
நேபாளத்தின் மீட்புப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த புதிய தொகுப்பு நிவாரணப் பொருள்கள் இந்திய விமானப்படையின் சி-130 (C-130) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
நேபாளத்தின் மீட்பு, நிவாரணம் மற்றும் தடயவியல் பணிகளுக்கு ஆதரவளிக்க, இந்தியா இதுவரை 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்களை பல்வேறு கட்டங்களாக அனுப்பியுள்ளது. அத்துடன் 54 நிபுணர்களையும் அங்கு பணியமர்த்தியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று நேபாள எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் திடீர் வெள்ளப்பெருக்கினால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேதப்படுத்தியது. இந்த பேரிடரில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 1,410-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 6,100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







