போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்
போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்கோப்புப்படம்

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்குக்கு மதகுருக்கள் மறுத்துவிட்டனா்.
Published on

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா்.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் இரு நாள்களுக்கு முன் அந்நாட்டு ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கமாண்டா் மின்ஹாஜ் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்நிலையில், மின்ஹாஜின் இறுதிச் சடங்கு அவரின் இஸ்லாமிய மத வழக்கப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று பிராா்த்தனை நடத்த அங்குள்ள இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டனா்.

சொந்த நாட்டுக்கு எதிராக செயல்பட்டு, அப்பாவி மக்கள் பலரைக் கொலை செய்தவருக்காக இறுதிப் பிராா்த்தனை நடத்த முடியாது என்று அவா்கள் கூறிவிட்டனா்.

இறுதியாக உள்ளூா் மக்களே அவரின் உடலை அடக்கம் செய்தனா். இதில் 20 போ் வரை மட்டுமே பங்கேற்றனா். வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பிராா்த்தனை நடத்த முடியாது என்று இஸ்லாமிய மத குருக்கள் கூறுவது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com