

பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி, ஜெர்மனியின் பிரதமராக பதவி வகித்த ஓலாஃப் ஷோல்ஸின் ‘சோசியல் டெமாக்கிரட்ஸ்’ கட்சி தோல்வியடைந்தது.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் 'கிறிஸ்தவ ஜனநாயக யுனியன் கட்சி சிஎஸ்யு/சிடியு’ ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து, ஜெர்மனியின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இன்று(மே 6) நடைபெற்றது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற 316 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்தநிலையில், முதல் சுற்று வாக்கெடுப்பில் அவரால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.
ஆனால், அடுத்து சுற்று வாக்கெடுப்பில் அவர் 325 வாக்குகளைப் பெற்று பிரதமராக தேர்வாகியுள்ளார். இதையடுத்து இன்றே ஜெர்மன் பிரதமராக ப்ரைட்ரிச் மெர்ஸ் பதவியேற்கவுள்ளார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ப்ராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெயெர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.