குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்.

News image

IANS

Updated On :7 மே 2025, 12:30 pm IST

தாக்குதல் நடக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. முன்னதாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்தும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலையடுத்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

"பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் அமெரிக்கர்கள் அவ்விடத்தைவிட்டுச் செல்ல வேண்டும்.

அதேபோல, இந்திய - பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். பாகிஸ்தான் பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

வான்வெளியும் மூடப்பட்டுள்ளதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறியுள்ளது.

அதேபோல அமெரிக்க வெளியுறவுத்துறையும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடக்கும் பகுதிகளைவிட்டு அமெரிக்க மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.