மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து

ஆபரேஷன் சிந்தூர் பற்றி ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியது...

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா - கோப்புப்படம்.

Published On :

நாம் யாரும் போரை விரும்பவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்படவே விரும்புவதாகவும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் தொடர்பாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தனர்.

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடினார்.

"நாம் யாரும் போரை விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்.

இந்த தாக்குதல் பஹல்காமில் தொடங்கியது. அங்கு அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

பதிலடி கொடுப்பதற்கான சரியான முறை இதுதான். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன. ராணுவ அமைப்புகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.