மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளில் உரை....

News image

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (கோப்புப் படம்)

ENS

Updated On :16 மே 2025, 4:12 pm

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.

பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே 16-இல் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், ‘பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி தர உரிமை இந்த தேசத்துக்கு உள்ளது.

பாகிஸ்தானின் ராணுவம் இந்தியாவுக்கு திறம்பட தக்க பதிலடி கொடுத்துள்ளதன் மூலம், பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றில் ஒரு “பொன்னான சகாப்தத்தை” எழுதியுள்ளது’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், இந்தியாவுடானான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.