டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது பற்றி...
US President Donald Trump
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் படம்: ஏபி
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும், ஏராளமான நாடுகளின் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயாா்க் நகரிலுள்ள சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.

வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

மேலும், வரி விதிப்பை நிறுத்திவைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், தற்காலிகமாக வரி விதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com