

பெர்லின் விமான நிலையத்தில் பறந்த மர்ம ட்ரோனால் விமானச் சேவைகள் 2 மணிநேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஜெர்மனி நாட்டின், பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை மர்ம ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8:08 மணி முதல் இரவு 9:58 மணி வரை விமானச் சேவைகள் 2 மணிநேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பின்னர் சனிக்கிழமை வழக்கம்போல் சேவைகள் மீண்டும் தொடங்கின. உள்ளூர் போலீஸார் பத்திரிக்கையிடம் கூறுகையில், ட்ரோனைப் பார்த்ததாக ஒருவர் தெரிவித்தார். நாங்களும் இதனை உறுதிப்படுத்தினோம். ஆனால் ட்ரோனைக் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும், இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸார் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. செப்டம்பரில் நேட்டோவின் வான்வெளியில் ட்ரோன் ஊடுருவல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியதையடுத்து ஐரோப்பா மிகுந்த எச்சரிக்கையில் உள்ளது.
கடந்த மாதம், ட்ரோன் பறந்ததால் முனிச் விமான நிலையம் 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.