

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ரிச்சர்ட் புரூஸ் செனி உடல்நலக் குறைவால் இன்று (நவ. 4) காலமானார். இவருக்கு வயது 84.
அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த நவீன துணை அதிபர் என போற்றப்படும் இவர், ஈராக் போர் கட்டமைப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
இதனிடையே நிமோனியா மற்றும் இதயம் சார்ந்த பிரச்னைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த புரூஸ் செனி, சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனை இவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவருக்கு மனைவி லைனி (61) மற்றும் லிஸ், மேரி என இரு மகள்கள் உள்ளனர்.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஜனவரி 30, 1941ஆம் ஆண்டு பிறந்த ரிச்சர்ட் புரூஸ் செனி, அமெரிக்காவின் 46வது துணை அதிபராகப் பதவி வகித்தார். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான ஆட்சியில் 2001 முதல் 2009 வரை இரு முறை துணை அதிபராக இருந்துள்ளார்.
இதையும் படிக்க | நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’? வாக்குப்பதிவு தொடங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.