ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்! களமிறங்கிய படைகள்!

ஜப்பானில் கரடி தாக்குதல்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் களமிறங்கியது குறித்து...
ஜப்பானில் கரடி தாக்குதல்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன
ஜப்பானில் கரடி தாக்குதல்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளனபடம் - ஏபி
Updated on
1 min read

ஜப்பானில், அதிகரித்துள்ள மக்கள் மீதான கரடிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின், அகிதா மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் கரடிகள் உணவுத் தேடி வருகின்றன. இதனால், அங்குள்ள பள்ளிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கரடிகள் நடமாடுவதாகக் கூறப்படுகிறது.

இதில், மக்கள் மீதான கரடிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரடிகளின் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததுடன், சுமார் 12 பேர் பலியாகியுள்ளதாகவும் ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கரடிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த படைகளைக் களமிறக்குவது குறித்து அகிதா மாகாண அரசுக்கும், ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகிதா மாகாணத்தில் கரடிகளைப் பிடிக்க கூண்டுகள் அமைப்பது, உள்ளூர் வேட்டைக்காரர்களுக்கு உதவி செய்வது மற்றும் கொல்லப்பட்ட கரடிகளின் உடல்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக வடக்கு அகிதாவில் அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் கரடிகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இருப்பினும், மக்களின் அன்றாட வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் படைகள் களமிறக்கப்பட்டதாகவும், நீண்டகாலத்திற்கு அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர முடியாது எனவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஷின்சிரோ கொயிசுமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?

Summary

In Japan, security forces have been deployed to control the increasing number of bear attacks on people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com