உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! இருளில் மூழ்கிய நகரங்கள்!

உக்ரைனின் எரிசக்தி மையங்களின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து...
உக்ரைனின் எரிசக்தி மையங்களின் மீது ரஷியா தாக்குதல்...
உக்ரைனின் எரிசக்தி மையங்களின் மீது ரஷியா தாக்குதல்...ஏபி
Published on
Updated on
1 min read

உக்ரைனின் மிகப் பெரிய எரிசக்தி மையங்களின் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களினால், அந்நாட்டின் ஏராளாமான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் உள்ள எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா மிகப் பெரியளவிலான தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்களினால் இயற்கை எரிவாயுவின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், குளிரில் இருந்து தங்களை பாதுகாக்க மக்கள் பயன்படுத்தும் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்களை எரிவாயு இன்றி இயக்க முடியாமல் தவிப்பதாக, உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளதால், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க அவசரகால மின் தடைகள் ஏற்படுத்தப்படுவதாக, உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் ஸ்விட்லானா க்ரின்சுக் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில், உக்ரைனின் டினிப்ரோ நகரத்தில் உள்ள 9 அடுக்குமாடி கட்டடம் தகர்க்கப்பட்டு, பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், ஒரு குழந்தை உள்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரில், ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் எரிசக்தி மையங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

Summary

Russia's attacks on Ukraine's largest energy centers have left large parts of the country without electricity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com